ரூ.14.60 லட்சத்தில் புதிய ரேஷன் கடை
ரூ.14.60 லட்சத்தில் புதிய ரேஷன் கடை
ரூ.14.60 லட்சத்தில் புதிய ரேஷன் கடை
ADDED : ஜூன் 24, 2024 07:10 AM
நாமக்கல் : நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிப்பட்டியில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 14.60 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.அதன் திறப்பு விழா, நேற்று நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''கொண்டிசெட்டிபட்டி ரேஷன் கடை, வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது, 14.60 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கடை மூலம், 1,041 குடும்ப ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறுவர்,'' என்றார். நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, கமிஷனர் சென்னுகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.