/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நைனாமலையில் தார்ச்சாலைக்கு நிதி ஒதுக்க வேண்டுகோள்நைனாமலையில் தார்ச்சாலைக்கு நிதி ஒதுக்க வேண்டுகோள்
நைனாமலையில் தார்ச்சாலைக்கு நிதி ஒதுக்க வேண்டுகோள்
நைனாமலையில் தார்ச்சாலைக்கு நிதி ஒதுக்க வேண்டுகோள்
நைனாமலையில் தார்ச்சாலைக்கு நிதி ஒதுக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 15, 2024 01:10 AM
சேந்தமங்கலம்: நைனாமலையில், மண் சாலை அமைக்கும் பணி முடிந்த நிலையில், தார்ச் சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் அடுத்துள்ள புதன்சந்தையில், நைனாமலை உள்ளது. 2,600 அடி உயரத்தில் வருதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமை நாளில் ஆயிரக்க-ணக்கான பக்தர்கள், 3,300 படிக்கட்டுகளில் ஏரி வருதராஜ பெரு-மாளை தரிசனம் செய்து விட்டு விரதம் இருப்பது வழக்கம். இதற்-காக, ஒவ்வொரு வாரமும் பக்தர்கள் முதல் நாள் வெள்ளிக்கி-ழமை இரவு முதல், விடிய விடிய நைனாமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, காலையில் இறங்கி அடிவா-ரத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்வர்.
நைனாமலைக்கு செல்லும் படிக்கட்டுகள் மிகவும் சிறியதாக உள்ளதாலும், அதிக படிக்கட்டுகள் உள்ளதாலும், 50 வயதை கடந்தவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் செல்ல முடி-யாத நிலை உள்ளது. எனவே, பக்தர்கள் எளிதில் நைனாமலை கோவிலுக்கு செல்லும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என, 15 ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கடந்த, தி.மு.க., ஆட்சியில், நைனாமலைக்கு செல்ல, ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. ஆனால், அந்த பணி நின்ற நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்-பட்டு மீண்டும் பூமிபூஜை போடப்பட்டது. அப்போதும், நிதி பற்-றாக்குறையால் சாலை அமைக்கும் பணி நின்றது. தற்போதைய தி.மு.க., ஆட்சியில், 7 கி.மீ., துாரத்திற்கு மலையில் சாலை அமைக்க, 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மீண்டும் பூமி-பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கின.
இந்த பணி துவங்கி இரு ஆண்டுகளை கடந்த நிலையில், மலை உச்சி வரை மண் சாலை அமைக்கும் பணி முழுமையாக முடிந்துள்ளது. மண் சாலையை, மழை காலங்களில் மக்கள் பயன்-படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, தார்ச்சாலை அமைக்க தமிழக அரசு மீண்டும் நிதி ஒதுக்கினால் தான் பணியை தொடர முடியும் என்ற நிலை உள்ளது.
வரும் புரட்டாசி மாதத்திற்குள், நைனாமலை மலைக்கு செல்லும் பாதை அமைக்கும் பணி முடித்து, பக்தர்கள் வருதராஜ பெருமாளை தரிசனம் செய்ய செல்லலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், தார்ச்சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்காததால், இந்-தாண்டு புரட்டாசி மாதத்திற்கு பக்தர்கள் பாதையில் செல்வது கேள்விக்குறியாகி உள்ளது.