Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/காளான் வளர்ப்பு, விதை உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி; இம்மாத இறுதியில் துவக்கம்

காளான் வளர்ப்பு, விதை உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி; இம்மாத இறுதியில் துவக்கம்

காளான் வளர்ப்பு, விதை உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி; இம்மாத இறுதியில் துவக்கம்

காளான் வளர்ப்பு, விதை உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி; இம்மாத இறுதியில் துவக்கம்

ADDED : ஜூலை 16, 2024 01:37 AM


Google News
மோகனுார்: 'திறன் வளர்ப்பு பயிற்சியான காளான் வளர்ப்பு மற்றும் காளான் விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள்' என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம், இம்மாத இறுதி வாரத்தில் துவங்குகிறது என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், இன்று துவங்கி, வரும் ஆக., 21 வரை, 25 நாட்கள் நடக்க இருந்த சிறப்பு பயிற்சி, இம்மாதம் இறுதி வாரத்தில் நடக்கிறது.

'திறன் வளர்ப்பு பயிற்சி-யான காளான் வளர்ப்பு மற்றும் காளான் விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள்' என்ற தலைப்பில், இந்திய தேசிய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன் இப்பயிற்சி நடக்க உள்ளது. பயிற்சியில், லாபம் தரும் காளான் வளர்ப்பு முறைகள், விதை உற்பத்தி, காளானின் வகைகள், காளான் வளர்க்கப்படும்போது ஏற்படும் இடர்பாடுகளும், தீர்வுகளும், காளானில் மதிப்பு கூட்-டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறைகள், விற்பனை முறைகள் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும், காளான் வளர்ப்பு உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தொழில் நுட்பங்கள் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்-கப்படும். பயிற்சியில், விவசாயிகள், விவசாய ஊரக இளை-ஞர்கள், படிப்பு முடித்து வேலையில்லாத பண்ணை மகளிர், மாணவ மாணவியர், கல்லுாரியில் பயிலும் விருப்பம் உள்ள மாணவ, மாணவியர், பண்ணையாளர்கள், ஊரக மகளிர் உள்-ளிட்டோர் பங்கேற்று பயன்பெறலாம். முதலில் வரும், 25 பேருக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் நேரிலோ அல்லது 04286266345, 266650, 9943008802, 7010580683, 9597746373 ஆகிய தொலைபேசி மற்றும் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us