/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ரெட்டிப்பட்டி அரசு உதவி பள்ளியில் காலை உணவு திட்டம்: எம்.பி., துவக்கம்ரெட்டிப்பட்டி அரசு உதவி பள்ளியில் காலை உணவு திட்டம்: எம்.பி., துவக்கம்
ரெட்டிப்பட்டி அரசு உதவி பள்ளியில் காலை உணவு திட்டம்: எம்.பி., துவக்கம்
ரெட்டிப்பட்டி அரசு உதவி பள்ளியில் காலை உணவு திட்டம்: எம்.பி., துவக்கம்
ரெட்டிப்பட்டி அரசு உதவி பள்ளியில் காலை உணவு திட்டம்: எம்.பி., துவக்கம்
ADDED : ஜூலை 16, 2024 01:41 AM
நாமக்கல்: நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டி அரசு உதவி பெறும் தொடக்-கப்பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டத்தை, எம்.பி., ராஜேஸ்குமார் துவக்கி வைத்தார்.தமிழகத்தில், ஏற்கனவே அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி-களில் படிக்கும், மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்-கப்பட்டு வருகிறது.
ஜூலை, 15 முதல், இந்த திட்டத்தை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்-டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தின் ஊரக பகுதிகளில் உள்ள, 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், இரண்டு லட்-சத்து, 23,536 மாணவ, மாணவியர் பயன்பெறுவார்கள் என, அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தை, நேற்று காலை, திருவள்ளூர் மாவட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்-ததில், ரெட்டிப்பட்டி பாரதி நிதி உதவி தொடக்க பள்ளியில் நடந்-தது. சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, 'அட்மா' தலைவர் பாலசுப்ரமணியன், பாரதி பள்ளி தாளாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.