Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் கோவில் மறு சீரமைப்பு பணி; உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நாமக்கல் கோவில் மறு சீரமைப்பு பணி; உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நாமக்கல் கோவில் மறு சீரமைப்பு பணி; உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நாமக்கல் கோவில் மறு சீரமைப்பு பணி; உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

ADDED : ஜூலை 15, 2024 01:10 AM


Google News
சென்னை: நாமக்கலில் பழமையான பொன்காளியம்மன் கோவிலில் மறு சீரமைப்பு பணிகளை அறநிலையத்துறை மேற்கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் சுப்பையன் தாக்கல் செய்த மனு: நாமக்கல் மாவட்டம், குமாரமங்கலத்தில் உள்ள பொன் காளியம்மன் கோவில், நுாறு ஆண்டுகள் பழமை-யானது. கடந்த 19ம் நுாற்றாண்டை சேர்ந்த இக்கோவில், அறநி-லைய கட்டுப்பாட்டில் உள்ளது. நுாறு ஆண்டுகள் கடந்த பழமை-யான கோவில்கள், அங்குள்ள சிலைகள் மற்றும் சின்னங்களை பாதுகாக்கும் வகையில், அறநிலையத்துறை பராமரிப்பு பணி-களை மேற்கொள்ள 2013ல் அரசாணை பிறப்பித்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுபடி, புராதன, பாரம்பரிய கோவில்கள், நினைவு சின்னங்களை பாதுகாக்கவும், ஆலோசனை வழங்க 17 உறுப்பினர்கள் அடங்கிய குழு மற்றும் மாமல்லபுரம் உலக புரா-தன பகுதி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

மாநில அளவிலான இக்குழு, பொன்காளி அம்மன் கோவிலை 2023ல் ஆய்வு செய்து, கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்-டபத்தை மறுசீரமைப்பு செய்ய அனுமதி இல்லை என தெரிவித்-தது. ஆனால், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அளித்த அறிக்-கையில், கோவிலின் கர்ப்ப கிரகம் உள்ளிட்ட பகுதிகளில் சுவர்-களில் புதிய கற்களை பதித்து கொள்ளலாம் என, அறிக்கை அளித்-தது.

மாநில அளவிலான கோவில் பாதுகாப்பு குழு, தொல்லியல் துறையிடம் ஆலோசிக்காமல், கர்ப்பகிரகம் ஆகியவற்றை இடித்-துவிட்டு, மறு சீரமைப்பை மேற்கொள்ள அறநிலையத்துறை அனுமதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே.21ல் மனு அளித்தேன். உரிய பதில் இல்லை. எனவே, பொன்காளியம்மன் கோவிலில் மறுசீரமைப்பு பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ்பாபு அடங்கிய அமர்வு, மனுவில் கூறப்பட்ட விஷயம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்பதால், கோவிலின் கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபத்தை மறு சீரமைக்கும் பணிகளுக்கு, தற்போது இடைக்கால தடை விதிக்கப்படுகிறது; மனுவுக்கு அறநிலையதுறை நான்கு வாரத்-துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்-தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us