/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ப.வேலுார் வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவுப.வேலுார் வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு
ப.வேலுார் வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு
ப.வேலுார் வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு
ப.வேலுார் வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு
ADDED : ஜூன் 03, 2024 07:08 AM
ப.வேலுார் : ப.வேலுார், சுல்தான்பேட்டை, மோகனுார் பிரிவு சாலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்தனுார், ப.வேலுார் பகுதியை சேர்ந்த விவசாயிகள், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டு கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு கொண்டு வரப்படும், கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.கடந்த வாரத்தைவிட இந்த வாரம், கோழிகள் வரத்து அதிகரித்ததால், விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டு கோழி, 550 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 400 ரூபாய்க்கு விற்பனையானது.ப.வேலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாரியம்மன் திருவிழா நடந்து வருவதால் பொதுமக்கள் அசைவத்தை தவிர்த்தனர். இதனால், வாடிக்கையாளர்கள் குறைவால் விலை சரிந்தது.