/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஒடிசாவில் கராத்தே பயிற்சி: நாமக்கல் வீரர்கள் சாதனைஒடிசாவில் கராத்தே பயிற்சி: நாமக்கல் வீரர்கள் சாதனை
ஒடிசாவில் கராத்தே பயிற்சி: நாமக்கல் வீரர்கள் சாதனை
ஒடிசாவில் கராத்தே பயிற்சி: நாமக்கல் வீரர்கள் சாதனை
ஒடிசாவில் கராத்தே பயிற்சி: நாமக்கல் வீரர்கள் சாதனை
ADDED : ஜூன் 03, 2024 07:09 AM
நாமக்கல் : ஒடிசா மாநிலம், பூரியில் கடந்த, 25 முதல், 31 வரை அகில இந்திய வேர்ல்டு கராத்தே கவுன்சில் கியோகுஷின் தலைமை பயிற்சியாளர் சிவாஜி கங்குலி தலைமையில், கோடைகால கராத்தே பயிற்சி முகாம் நடந்தது.
மேற்குவங்கம், குஜராத், மஹாராஷ்டிரா, அசாம், உத்தரபிரதேசம், அருணாச் சலபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து வீரர், வீராங்கனையர் கலந்து கொண்டனர்.அதில், பல்வேறு பயிற்சி மற்றும் கருப்பு பெல்ட் தேர்வு முகாம் நடந்தது.இதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, தமிழ்நாடு கியோகுஷின் புல்காண்டக்ட் கராத்தே தலைமை பயிற்சியாளர் உதயக்குமார் தலைமையில் சென்ற சக்திவேல், நவீன், கார்த்திக், பிரசாத், கமலேஷ் ஆகியோர் பங்கேற்று, கருப்பு பெல்ட் பெற்று சாதனை படைத்தனர்.