/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாயுடுகள் சங்கம் சார்பில் சுற்று பொங்கல் விழா நாயுடுகள் சங்கம் சார்பில் சுற்று பொங்கல் விழா
நாயுடுகள் சங்கம் சார்பில் சுற்று பொங்கல் விழா
நாயுடுகள் சங்கம் சார்பில் சுற்று பொங்கல் விழா
நாயுடுகள் சங்கம் சார்பில் சுற்று பொங்கல் விழா
ADDED : ஜூன் 02, 2024 07:36 AM
ராசிபுரம் : ராசிபுரத்தில் கவரவலிஜவார் நாயுடுகள் சங்கம் சார்பில் சுற்று பொங்கல் விழா, நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மாலை, நித்திய சுமங்கலி மாரியம்மன் உற்சவர் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. சமுதாய மண்டபத்தில் உற்சவர் வந்தவுடன், அபிஷேகம், ஆராதனை நடந்தது.
இரவு தெப்பம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, பச்சை பந்தலில் வீற்றிருக்கும் சமயபுரம் மாரியம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி, செல்வ விநாயகருக்கு அபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து கரகம், அக்னி சட்டி ஊர்வலத்துடன், சக்தி அழைக்கும் நிகழ்ச்சி, ஊர்வலம் ஆகியவை நடக்கிறது. மாலை நித்திய சுமங்கலி மாரியமனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.