/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் லோக்சபா தொகுதி ஓட்டுகள் அதிகபட்சம் 23 சுற்றுகளில் எண்ணிக்கைநாமக்கல் லோக்சபா தொகுதி ஓட்டுகள் அதிகபட்சம் 23 சுற்றுகளில் எண்ணிக்கை
நாமக்கல் லோக்சபா தொகுதி ஓட்டுகள் அதிகபட்சம் 23 சுற்றுகளில் எண்ணிக்கை
நாமக்கல் லோக்சபா தொகுதி ஓட்டுகள் அதிகபட்சம் 23 சுற்றுகளில் எண்ணிக்கை
நாமக்கல் லோக்சபா தொகுதி ஓட்டுகள் அதிகபட்சம் 23 சுற்றுகளில் எண்ணிக்கை
ADDED : ஜூன் 02, 2024 07:35 AM
நாமக்கல் : வரும், 4ல் லோக்சபா தொகுதி தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. நாமக்கல் தொகுதியில், 6 சட்டசபை தொகுதியில், 1,661 பூத்களில் பதிவான ஓட்டுகள், குறைந்தபட்சம், 19, அதிகபட்சம், 23 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன.
நாடு முழுதும், கடந்த ஏப்., 19ல், லோக்சபா தேர்தல் நடந்தது. நாமக்கல் லோக்சபா தொகுதியில், சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
அவற்றில், சங்ககிரி தொகுதியில், இரண்டு லட்சத்து, 20,268 பேர்; ராசிபுரத்தில், ஒரு லட்சத்து, 88,089 பேர்; சேந்தமங்கலத்தில், ஒரு லட்சத்து, 91,319 பேர்; நாமக்கல்லில், ஒரு லட்சத்து, 91,543 பேர்; ப.வேலுாரில், ஒரு லட்சத்து, 70,281 பேர்; திருச்செங்கோட்டில், ஒரு லட்சத்து, 74,569 பேர் என, ஆறு சட்டசபை தொகுதிகளில், 11 லட்சத்து, 36,069 பேர் ஓட்டளித்துள்ளனர். அதன் மூலம், நாமக்கல் லோக்சபா தொகுதியில், 78.21 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில் நுட்ப கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில், வரும், 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஆறு சட்டசபை தொகுதிகளிலும், தலா, 14 மேசைகள் வீதம், 84 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சங்ககிரி சட்டசபை தொகுதியில், 312 பூத்களில், 23 சுற்றுகள், ராசிபுரம் தொகுதியில், 261 பூத்களில், 19 சுற்றுகள், சேந்தமங்கலம் தொகுதியில், 284 பூத்களில், 21 சுற்றுகள், நாமக்கல்லில், 289 பூத்களில், 21 சுற்றுகள், ப.வேலுாரில், 254 பூத்களில், 19 சுற்றுகள், திருச்செங்கோட்டில், 261 பூத்களில், 21 சுற்றுகள் எண்ணப்படுகின்றன.