/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தென்னையில் காண்டா மிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை தென்னையில் காண்டா மிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை
தென்னையில் காண்டா மிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை
தென்னையில் காண்டா மிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை
தென்னையில் காண்டா மிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை
ADDED : ஜூன் 02, 2024 07:35 AM
நாமகிரிப்பேட்டை : தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த, நாமகிரிப்பேட்டை வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்னை தோப்பு அருகே, கம்போஸ்ட் மற்றும் உரக்குழிகள் அமைக்காமல் இருக்க வேண்டும். கோடை, மழைக்காலங்களில் அந்தி நேரத்தில் விளக்கு பொறிகளை வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். தாக்குதல் அதிகரிக்கும் போது மரங்களில் வண்டுகள் உள்ளதா என, கண்டுபிடித்து கம்பியின் உதவியால் வெளியே எடுத்து கொன்று விட வேண்டும். காண்டாமிருக வண்டின் வாயில் பேக்லோ வைரஸ் ஒரக்டர்ஸ் என்ற வைரஸை ஊசியின் மூலம் செலுத்தினால், அது தோப்பில் மற்ற வண்டுகளுடன் கலந்து நோயினை பரப்பி அவற்றை அழிக்கின்றது. ஹெக்டேருக்கு ஐந்து ரீனோலியூர் இன கவர்ச்சி பொறிகளை வைக்கலாம்.
ஒரு வாளியில், 1.5 மி., லேம்டா சைக்ளோதிரின், 2 லி., நார் கலந்த கலவையை ரினோலியூருடன் சேர்ந்து தொங்கவிட வேண்டும். 5 அந்து உருண்டைகளை மணலால் மூடி, நாற்றுகளின் குருத்து பகுதியில், 45 நாட்களுக்கு ஒருமுறை வைக்க வேண்டும். ஒரு மண் பானையில், ஒரு கிலோ ஆமணக்கு, 5 லி., நீருடன் கலந்து தோப்பில் வைத்து வண்டுகளை கவரலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.