Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் சிலவரி செய்திகள்

நாமக்கல் சிலவரி செய்திகள்

நாமக்கல் சிலவரி செய்திகள்

நாமக்கல் சிலவரி செய்திகள்

ADDED : ஜூன் 17, 2024 01:06 AM


Google News
பஞ்சமுக ஆஞ்சநேயர்

சுவாமிக்கு சிறப்பு பூஜை

குமாரபாளையம்: ஆனி முதல் ஞாயிறையொட்டி, குமார

பாளையம் திருவள்ளுவர் நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடந்தன. இதேபோல் அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.

சிறுவனுக்கு தொல்லை

வாலிபருக்கு போக்சோ

எருமப்பட்டி: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, இரண்டு மாதத்திற்கு பின் போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

எருமப்பட்டி அருகே, வரகூர் அருந்ததியர் தெருவை சேர்ந்த, 10 வயது சிறுவன். இவர், கடந்த ஏப்., 21ல், அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கரண், 26, என்பவர் பாம்பு வருகிறது என, பயமுறுத்தியுள்ளார். இதனால் பயந்த சிறுவர்கள், அங்கிருந்த ஓடிய நிலையில், தனியாக இருந்த, 10 வயது சிறுவனை பிடித்து, கரண் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து புகார்படி, எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து கரணை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று பொன்னேரி பகுதியில், எருமப்பட்டி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கரணை பிடித்து, போக்சோ சட்டத்தில் கைது செய்து, நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மளிகை கடையில்

திருடிய 3 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல், புதுத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜூ, 43. இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம்போல் கடையை பூட்டி விட்டி

வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கடையின் அருகே வசிப்பவர்கள், செல்வராஜூக்கு போன் செய்து, 'கடை திறந்திருப்பதாகவும், கடைக்கும் முன் நிறுத்தியுள்ள ஸ்கூட்டியில், 2 பேர் தப்பித்து செல்வதாகவும்' கூறினர். கடைக்கு வந்து பார்த்த போது, கடை திறந்திருப்பதுடன் கல்லாவில் வைத்திருந்த, 1,800 ரூபாயை காணவில்லை. இதுகுறித்து, செல்வராஜூ நாமக்கல் போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரணையில், கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 19, ராஜலிங்கம், 31, மற்றும் 17 வயது சிறுவன்

என்பது தெரிந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டு மல்லி விலை உயர்வு

எருமப்பட்டி-

எருமப்பட்டி யூனியனில், கஸ்துாரிப்பட்டி, அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் குண்டு மல்லி சாகுபடியில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். தினந்தோறும் பூக்களை பறித்து, நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் பூ மார்க்கெட்டிற்கு ஏலத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

விசேஷ நாட்களில் குண்டுமல்லி பூவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், கடந்த, 2 நாளாக முகூர்த்த தினத்தால், குண்டுமல்லி பூ கிலோ, 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி, ‍நேற்று நடந்த ஏலத்திலும் பூக்கள் விலை குறையாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us