Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரயில்வே பாலத்தால் குட்டையாக மாறிய ராஜவாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

ரயில்வே பாலத்தால் குட்டையாக மாறிய ராஜவாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

ரயில்வே பாலத்தால் குட்டையாக மாறிய ராஜவாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

ரயில்வே பாலத்தால் குட்டையாக மாறிய ராஜவாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

ADDED : ஜூன் 17, 2024 01:06 AM


Google News
ராசிபுரம்: ராசிபுரம் ஏரி, சேலம் ரோட்டில் உள்ளது. போதமலையின் ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இந்த ஏரிக்கு நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளதால், மழை காலத்தில் வேகமாக நிரம்பி விடும். இதனால் சுற்றுப்பகுதி விவசாய நிலங்களின் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கும். அதேபோல், இந்த ஏரி சீக்கிரம் நிரம்பி விடும் என்பதால், வெளியேறும் தண்ணீர் அணைப்பாளையம் ஏரிக்கு செல்ல ராஜவாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் ரயில் பாதை மற்றும் மேம்பாலம் அமைக்கும்போது, ராசிபுரம் ஏரியும் ராஜவாய்க்காலும் பாதிக்கப்பட்டன. ராசிபுரம் ஏரியில் பெரும்பகுதி ரயில் பாலம் ஆக்கிரமித்து விட்டது. அதேபோல், பாலம், பாதை குறுக்கிட்டதால் ராஜவாய்க்கால் குட்டையாக காட்சியளிக்கிறது. நகராட்சியின் சில பகுதிகளில் இருந்து வரும் சாக்கடையும் இதில் கலந்து விடுவதால், தேங்கி நிற்கும் நீர் சாக்கடை குட்டையாகி விட்டது. ராஜவாய்க்காலை ஒட்டியுள்ள குடியிருப்புகள் கொசுக்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, ராஜவாய்க்காலை சீர்படுத்தி தண்ணீர் தேங்காமல் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us