/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரூ.2.60 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்: 2 பேர் கைது ரூ.2.60 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்: 2 பேர் கைது
ரூ.2.60 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்: 2 பேர் கைது
ரூ.2.60 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்: 2 பேர் கைது
ரூ.2.60 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்: 2 பேர் கைது
ADDED : ஜூன் 17, 2024 01:05 AM
பள்ளிப்பாளையம்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 2.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை மொளசி போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த தொட்டிகாரன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக, மொளசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், நேற்று மாலை தொட்டிகாரன்பாளையம் பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 497 கிலோ குட்கா மற்றும் பான் மசாலாவை பறிமுதல் செய்து, அக்கமாபாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி, 35, பாலப்பட்டியை சேர்ந்த அரவிந்தன், 29 ஆகிய, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.