/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மின் மயானத்தில் பராமரிப்பு ;2 நாட்கள் பணிகள் நிறுத்தம்மின் மயானத்தில் பராமரிப்பு ;2 நாட்கள் பணிகள் நிறுத்தம்
மின் மயானத்தில் பராமரிப்பு ;2 நாட்கள் பணிகள் நிறுத்தம்
மின் மயானத்தில் பராமரிப்பு ;2 நாட்கள் பணிகள் நிறுத்தம்
மின் மயானத்தில் பராமரிப்பு ;2 நாட்கள் பணிகள் நிறுத்தம்
ADDED : ஜூன் 20, 2024 06:42 AM
குமாரபாளையம் : குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்தில் பராமரிப்பு பணி நடக்க இருப்பதால், இன்றும் மற்றும் நாளை ஆகிய, இரண்டு நாட்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக, நகராட்சி கமிஷனர் குமரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:குமாரபாளையம் நகராட்சி மின் மயானம் கலைமகள் தெருவில் செயல்பட்டு வருகிறது.
இதில், இன்று, நாளை ஆகிய இரு நாட்கள் பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதனால் இறந்தவர் சடலங்கள் எரியூட்டும் பணி, இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வரும், 22 முதல் வழக்கம்போல் மின் மயானம் செயல்படும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.