/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/8 தாலுகாவில் ஜமாபந்தி 475 மனுக்கள் அளிப்பு8 தாலுகாவில் ஜமாபந்தி 475 மனுக்கள் அளிப்பு
8 தாலுகாவில் ஜமாபந்தி 475 மனுக்கள் அளிப்பு
8 தாலுகாவில் ஜமாபந்தி 475 மனுக்கள் அளிப்பு
8 தாலுகாவில் ஜமாபந்தி 475 மனுக்கள் அளிப்பு
ADDED : ஜூன் 20, 2024 06:35 AM
நாமக்கல் : மாவட்டத்தில் நடந்து வரும் ஜமாபந்தியில், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 475 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.நாமக்கல் மாவட்டத்தில், பசலி ஆண்டு, 1433-க்கான வருவாய் தீர்வாயம், கடந்த, 11ல், துவங்கியது.
நாமக்கல், ராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம், மோகனுார், திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் ஆகிய, எட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்தது. அதில், ப.வேலுார், திருச்செங்கோடு தாலுகாவை தவிர்த்து, மற்ற தாலுகாவில் ஜமாபந்தி முடிந்துவிட்டது. நேற்று முன்தினம் வரை, 475 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.பட்டா மாறுதல், 71, பட்டா மாறுதல் உட்பிரிவு இல்லாதவை, 93, கணினி திருத்தம், 30, பிறப்பு, இறப்பு சான்று, 3, இணைய வழி சான்று, 4, எப் லைன், 45, முதியோர் உதவித்தொகை, 21, இலவச வீட்டுமனை பட்டா, 145, ஆக்கிரமிப்பு அகற்றம், 21, ரேஷன் கார்டு, 9, இதர மனுக்கள், 63. நாமக்கல் தாலுகாவில், 29, சேந்தமங்கலம், 59, ராசிபுரம், 143, மோகனுார், 108, திருச்செங்கோடு, 75, ப.வேலுார், 61 என, மொத்தம், 475 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.'இந்த மனுக்கள் அந்தந்த துறைக்கு அனுப்பப்பட்டு, பரிசீலனை செய்து, தகுதி அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.