/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/காளியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளைகாளியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை
காளியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை
காளியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை
காளியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை
ADDED : பிப் 25, 2024 03:31 AM
ராசிபுரம்: ராசிபுரம், காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர் ஒருவர் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
ராசிபுரம் ரயில் நிலையம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்பு கும்பாபி ேஷகம் செய்யப்பட்டது. நேற்று காலை வழக்கம்போல், கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலை உடைத்த மர்ம நபர் அதில் இருந்த, 5,000 ரூபாயை திருடி சென்றுள்ளார்.
ராசிபுரம் போலீசார் கோவிலில் இருந்த 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்த போது, நள்ளிரவு, 1:57 மணிக்கு முகத்தை மறைத்து குல்லா அணிந்து கொண்டு, கையில் கிளவுஸ் அணிந்து வந்து மர்ம நபர் ஒருவர் உண்டியலை உடைத்து பணத்தை எடுப்பது தெரிந்தது.
இந்த காட்சி சிறிது நேரத்தில் சமூக ஊடகங்கள் வழியாக, ராசிபுரம் பகுதி மக்களுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.