பிரஜ்வல் ரேவண்ணாவால் சிறுமியர் பாதிப்பு?: மகளிர் ஆணையம் அழைப்பு
பிரஜ்வல் ரேவண்ணாவால் சிறுமியர் பாதிப்பு?: மகளிர் ஆணையம் அழைப்பு
பிரஜ்வல் ரேவண்ணாவால் சிறுமியர் பாதிப்பு?: மகளிர் ஆணையம் அழைப்பு
ADDED : ஜூலை 04, 2024 05:55 PM

பெங்களூரு: 'பிரஜ்வல் ரேவண்ணாவால் பெண்கள், சிறுமியர் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால், எங்களிடம் புகார் தரலாம்' என, மாநில மகளிர் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. பலாத்கார வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்பட்டார். தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவால் சிறுமியரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, மாநில மகளிர் ஆணையத்திற்கு சந்தேகம் எழுந்தது.
இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு, மகளிர் ஆணையம் கடிதம் எழுதியது. ஆனால், இதுவரை சிறப்பு குழுவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் பிரஜ்வல் ரேவண்ணாவால் சிறுமியர் யாரும் பாதிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு, மகளிர் ஆணையம் வந்துள்ளது.
ஆனாலும், 'பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டு இருந்தால் எங்களிடம் வந்து புகார் தரலாம். பாதுகாப்பு அளிக்கிறோம்' என பெண்கள், சிறுமியருக்கு மாநில மகளிர் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.