/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ராசிபுரத்தில் காற்றுடன் கன மழை மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்புராசிபுரத்தில் காற்றுடன் கன மழை மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
ராசிபுரத்தில் காற்றுடன் கன மழை மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
ராசிபுரத்தில் காற்றுடன் கன மழை மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
ராசிபுரத்தில் காற்றுடன் கன மழை மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 07, 2024 12:15 AM
ராசிபுரம் : ராசிபுரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழைக்கு, ஆத்துார் பிரதான சாலையில், 3 புளிய மரங்கள் சாய்ந்தன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், நேற்று முன்தினம் மாலை முதல் துாறல் மழை பெய்து கொண்டிருந்தது. இரவு, 10:00 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய தொடங்கியது. இரவில் மழை பெய்ததால், பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பில்லை. நேற்று காலை நிலவரப்படி, ராசிபுரம் பகுதியில், 36.02 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
இந்நிலையில், இரவில் காற்றுடன் கனமழை பெய்ததால், ஆத்தார் பிரதான சாலையில், சீராப்பள்ளி பகுதியில் இருந்த காய்ந்த புளியமரம் ஒன்று சாலையில் சாய்ந்தது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதேபோல், காக்காவேரி பிரதான சாலையோரம் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்தது. அதேபோல், கோனேரிப்பட்டி பகுதியிலும் சாலையோரம் இருந்த மரம் வயலில் சாய்ந்ததால் எந்த பாதிப்பும் இல்லை. நாமகிரிப்பேட்டையில் இருந்து அரியாகவுண்டம்பட்டி செல்லும் சாலையில் இருந்த மரம், நேற்று மதியம் திடீரென சாய்ந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.