/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வைகாசி அமாவாசையில் வராஹி அம்மனுக்கு பூஜைவைகாசி அமாவாசையில் வராஹி அம்மனுக்கு பூஜை
வைகாசி அமாவாசையில் வராஹி அம்மனுக்கு பூஜை
வைகாசி அமாவாசையில் வராஹி அம்மனுக்கு பூஜை
வைகாசி அமாவாசையில் வராஹி அம்மனுக்கு பூஜை
ADDED : ஜூன் 07, 2024 12:15 AM
ப.வேலுார் : வைகாசி அமாவாசையையொட்டி, ப.வேலுார் அருகே, பாண்டமங்கலம் சாய்பாபா கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
மதியம், 12:00 மணிக்கு வராஹி அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீறு போன்ற, 18 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு, தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வராஹி அம்மனை போற்றி பாடல்கள் பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.