/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வேண்டாம் கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வேண்டாம்
கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வேண்டாம்
கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வேண்டாம்
கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வேண்டாம்
ADDED : செப் 12, 2025 02:21 AM
திருச்செங்கோடு சாக்கடை கழிவுநீர் வாய்க்கால்களில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், கேரி பேக்குகள் உள்ளிட்டவைகளை போட வேண்டாம் என, திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினிசுரேஷ்பாபு, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் மழை பெய்தது. இதனால் திருச்செங்கோடு புது பஸ்ஸ்டாண்ட், ஸ்டேட் பேங்க் ரோடு பகுதி, சங்ககிரி ரோடு பகுதிகளில் மழைநீர் ஆறு போல் ஓடியது. இதனால் கார், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டது குறித்து, நகராட்சி தலைவர் நளினிசுரேஷ்பாபு, இன்ஜினியர் சரவணன் ஆகியோர் நேற்று காலை ஆய்வு செய்தனர்.
அப்போது சாக்கடைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், மது பாட்டில்கள், கேரி பேக்குகளால் அடைப்பு ஏற்பட்டு, மழை தண்ணீர் ஓட வழியின்றி சாலைகளில் செல்லும் சூழ்நிலை உருவானது. பின்னர், நகராட்சி பணியாளர்கள் பொக்லைன் உதவியுடன், சாக்கடைகளில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
நகராட்சி தலைவர் நளினிசுரேஷ்பாபு கூறுகையில்,''சாக்கடைகளில் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள், மது பாட்டில்கள், உணவு உண்ணும் தட்டுகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் குப்பைகளை போட்டு வைத்துள்ளனர். பொது நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் குப்பையை சாக்கடைகளில் எரிவதால் அடைத்துக் கொள்கிறது. எனவே இதை தவிர்த்து, நகராட்சி பணியாளர்களிடம் குப்பையை தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும்,'' என்றார்.