/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பண்ணையம்மன் கோவில் ஆவணி தேர்திருவிழா பண்ணையம்மன் கோவில் ஆவணி தேர்திருவிழா
பண்ணையம்மன் கோவில் ஆவணி தேர்திருவிழா
பண்ணையம்மன் கோவில் ஆவணி தேர்திருவிழா
பண்ணையம்மன் கோவில் ஆவணி தேர்திருவிழா
ADDED : செப் 12, 2025 02:20 AM
ராசிபுரம், ராசிபுரம் அருகே, பண்ணையம்மன் கோவிலில் ஆவணி தேர்திருவிழா நேற்று நடந்தது.
ராசிபுரம் அடுத்துள்ள பண்ணையம்மன் கோயிலில் ஆவணி திருவிழா கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சமுதாய கூடத்திற்கு எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நேற்று நடந்தது.
ராசிபுரம், ஆத்துார், தலைவாசல், கள்ளக்குறிச்சி, அரூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரின் முன்னர் ஆண்களும், பெண்களும் பாரம்பரிய கிராமப்புற நடனமாடி சென்றனர். தொடர்ந்து பொங்கல் வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர்.