/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/விரதமிருந்த மாணவர்களுக்கு தண்டனை தலைமையாசிரியரை கண்டித்து தர்ணாவிரதமிருந்த மாணவர்களுக்கு தண்டனை தலைமையாசிரியரை கண்டித்து தர்ணா
விரதமிருந்த மாணவர்களுக்கு தண்டனை தலைமையாசிரியரை கண்டித்து தர்ணா
விரதமிருந்த மாணவர்களுக்கு தண்டனை தலைமையாசிரியரை கண்டித்து தர்ணா
விரதமிருந்த மாணவர்களுக்கு தண்டனை தலைமையாசிரியரை கண்டித்து தர்ணா
ADDED : ஜன 13, 2024 03:54 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையத்தில் ஒரே வளாகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு, 8, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர், சபரிமலை, பழநிமலை கோவிலுக்கு செல்ல மாலை அணிந்து பள்ளிக்கு வந்துள்ளனர்.இந்த மாணவர்களை, தலைமையாசிரியர் சுப்ரமணி, வகுப்பறைக்கு வெளியே முட்டி போடச்சொல்லி தண்டனை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த, பா.ஜ., மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் தங்கவேல் தலைமையில், நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன் திரண்டு, தலைமையாசிரியரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, தலைமையாசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து, அனைவரிடமும், தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்டார். அதன்பின், தர்ணாவை கைவிட்டனர்.இதுகுறித்து, தலைமையாசிரியர் சுப்பிரமணியிடம் கேட்டபோது, ''சுவாமிக்கு மாலை அணிந்து கோவிலுக்கு செல்வதால், மாணவர்கள் அதிக நாட்கள் விடுமுறை எடுக்கும் சூழல் உள்ளது. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கிறது. அதற்காக, மாணவர்களை கண்டித்து, முட்டி போட சொன்னேன். வேறு எந்த நோக்கமும் இல்லை,'' என்றார்.