/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'சிப்காட்' திட்டத்தை கைவிடக்கோரி கலெக்டர் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம்'சிப்காட்' திட்டத்தை கைவிடக்கோரி கலெக்டர் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம்
'சிப்காட்' திட்டத்தை கைவிடக்கோரி கலெக்டர் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம்
'சிப்காட்' திட்டத்தை கைவிடக்கோரி கலெக்டர் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம்
'சிப்காட்' திட்டத்தை கைவிடக்கோரி கலெக்டர் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 16, 2024 01:42 AM
நாமக்கல்: வளையப்பட்டி பகுதியில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் பகுதிகளில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுப்ப-தற்கு வருவாய் துறையினர் ஆய்வு பணி மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் பல்-வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சி-யாக, நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:கடந்த, 2023 மே, 29ல், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில், வருவாய் துறையினர் தயார் செய்யப்பட்ட வரைபடங்களையும், அறிக்கைகளையும் காண்பித்-தனர். அதில், நீர்நிலைகள் மறைக்கப்பட்டு, விவசாய நிலங்களை தரிசு நிலங்கள் என குறிப்பிட்டிருந்தனர். அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், புதிதாக வரைபடம் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றனர். ஆனால், ஓராண்டு முடிந்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை. அதனால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரு-கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், பழனிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.