Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மத்தியபிரதேசத்தில் இருந்து 2,500 டன் கோதுமை வரத்து

மத்தியபிரதேசத்தில் இருந்து 2,500 டன் கோதுமை வரத்து

மத்தியபிரதேசத்தில் இருந்து 2,500 டன் கோதுமை வரத்து

மத்தியபிரதேசத்தில் இருந்து 2,500 டன் கோதுமை வரத்து

ADDED : ஜூலை 16, 2024 01:42 AM


Google News
நாமக்கல்: மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து, 2,500 டன் கோதுமை சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு வரவழைக்கப்பட்டது.

நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவை-யான மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், பெரும்பாலும் வடமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்-படும். அதன்படி, நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளின் தேவைக்காக, 2,500 டன் கோதுமையை மத்தியபிரதேச மாநிலம், கிட்வார்சியில் இருந்து, 41 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டது. பின், அங்கிருந்து, 110 லாரிகளில் ஏற்றி, உணவுப்பொருள் பாது-காப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us