/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/இனப்படுகொலையை கண்டித்து மா.கம்யூ.,வினர் ஆர்ப்பாட்டம்இனப்படுகொலையை கண்டித்து மா.கம்யூ.,வினர் ஆர்ப்பாட்டம்
இனப்படுகொலையை கண்டித்து மா.கம்யூ.,வினர் ஆர்ப்பாட்டம்
இனப்படுகொலையை கண்டித்து மா.கம்யூ.,வினர் ஆர்ப்பாட்டம்
இனப்படுகொலையை கண்டித்து மா.கம்யூ.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 03, 2024 07:14 AM
எலச்சிபாளையம் : இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை கண்டித்து, மா.கம்யூ., கட்சி சார்பில் எலச்சிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடந்த, 2023 அக்., 7 முதல் பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து இனப்படுகொலையை மேற்கொண்டு வருகிறது. இதுவரை, 36,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்த, மே, 26ல் எல்லை நகரமான ரபாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில், 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 20க்கும் மேற்பட்டோர் குழந்தைகளும், பெண்களுமாவர். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம், போரை நிறுத்தக்கோரியும் இஸ்ரேல் அரசு போரை நிறுத்தாமல் தீவிரப்படுத்தி வருகிறது. இதனை கண்டித்து, நேற்று மாலை, எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப்பில், மா.கம்யூ., கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், மோட்டார் சங்க மாவட்ட பொருளாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.