/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வீடுகளுக்குள் மழைநீர் செல்வதை தடுக்க வடிகால் குழாய் விரிவாக்கம்வீடுகளுக்குள் மழைநீர் செல்வதை தடுக்க வடிகால் குழாய் விரிவாக்கம்
வீடுகளுக்குள் மழைநீர் செல்வதை தடுக்க வடிகால் குழாய் விரிவாக்கம்
வீடுகளுக்குள் மழைநீர் செல்வதை தடுக்க வடிகால் குழாய் விரிவாக்கம்
வீடுகளுக்குள் மழைநீர் செல்வதை தடுக்க வடிகால் குழாய் விரிவாக்கம்
ADDED : ஜூன் 03, 2024 07:14 AM
புதுச்சத்திரம் : புதுச்சத்திரத்தில், கடந்த வாரம் பெய்த மழையால், தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது.
இதனை தடுக்க வடிகால் குழாய் விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.புதுச்சத்திரம் பைபாஸ் மேம்பாலத்திற்கு கீழ் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலைக்கு அருகே குடியிருப்பு பகுதி, பால் உற்பத்தியாளர் சங்கம், பத்திர பதிவாளர் அலுவலகம், அரசு பள்ளி, ஏராளமான வணிக கடைகள் உள்ளன. இதன் அருகே, புதுச்சத்திரம் செல்லும் சர்வீஸ் சாலையின் கீழ் இணைப்பு சாலையில், மழைநீர் செல்லும் வகையில் வடிகால் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் மிகவும் குறுகியதாக உள்ளதால், கடந்த வாரம் கனமழை பெய்த போது, மழை நீர் செல்ல வழியில்லாமல் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது.இதனால், வடிகால் குழாயை பெரியதாக அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், வீடுகளுக்குள் மழை நீர் செல்லாத வகையில் குழாயை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.