/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/குடிநீர் இணைப்பிற்கு பணம் வசூல் சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் புகார்குடிநீர் இணைப்பிற்கு பணம் வசூல் சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் புகார்
குடிநீர் இணைப்பிற்கு பணம் வசூல் சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் புகார்
குடிநீர் இணைப்பிற்கு பணம் வசூல் சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் புகார்
குடிநீர் இணைப்பிற்கு பணம் வசூல் சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் புகார்
ADDED : பிப் 12, 2024 11:24 AM
எருமப்பட்டி: சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் 7,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு டவுன் பஞ்., மூலம் அந்தந்த வீதிகளில் சின்டெக்ஸ் டேங்க் வைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், டவுன் பஞ்., தனி நபர் குடிநீர் இணைப்பு, 4,000க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த, 6 மாதங்களாக இங்குள்ள தனி நபர் வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லாதவர்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. புதிதாக குடிநீர் இணைப்பு கேட்கும் மக்களிடமும், குடிநீர் இணைப்பிற்கு பெயர் மாற்றம் கேட்டு விண்ணப்பிக்கும் மக்களிடமும், டவுன் பஞ்., செலுத்த வேண்டிய டிபாசிட் கட்டணத்தை விட கூடுதலாக ஒரு இணைப்பிற்கு, 10,000 ரூபாய் கேட்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, கடைவீதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது: ேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் தற்போது புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் வழங்கப்படும் குடிநீர் இணைப்புகளுக்கு, கூடுதல் பணம் கேட்கின்றனர். குடிநீர் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யக்கோரி, 5,200 ரூபாய் டிபாசிட் கட்டிய பின்பும், 15,000 ரூபாய் கூடுதலாக கேட்கின்றனர். எனவே, கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.