/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/காலி பணியிடங்களை நிரப்ப சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்காலி பணியிடங்களை நிரப்ப சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 11, 2024 12:41 AM
நாமக்கல்: நாமக்கல்லில், சி.ஐ.டி.யு., மாவட்டக்குழு சார்பில், பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணைத்தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். அதில், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். பணமாக்கல் என்ற பெயரால், பொதுத்துறைகளை கார்ப்ரேட்களுக்கு தாரைவார்க்ககூ-டாது. அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளம், 26,000 ரூபாய் அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி ஊழியர்க-ளுக்கு வேலைப்பலுவை திணிக்க கூடாது. காலியிடங்களை நிரப்ப வேண்டும். பணி பாதுகாப்பை உத்தரவா-தப்படுத்த, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், இதர சலுகைகளை அமல்படுத்த வேண்டும். முறைசாரா தொழிலாளர்க-ளுக்கு சமூக, சட்ட பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயலாளர் வேலுசாமி, தலைவர் அசோகன், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.