/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'ஆக., 2, 3ல் வல்வில் ஓரி விழா பசுமை திருவிழாவாக நடத்தணும்''ஆக., 2, 3ல் வல்வில் ஓரி விழா பசுமை திருவிழாவாக நடத்தணும்'
'ஆக., 2, 3ல் வல்வில் ஓரி விழா பசுமை திருவிழாவாக நடத்தணும்'
'ஆக., 2, 3ல் வல்வில் ஓரி விழா பசுமை திருவிழாவாக நடத்தணும்'
'ஆக., 2, 3ல் வல்வில் ஓரி விழா பசுமை திருவிழாவாக நடத்தணும்'
ADDED : ஜூலை 11, 2024 12:41 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி என, முப்-பெரும் விழா, தமிழக அரசு சார்பில் கொண்டாடுவதற்கான பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.அப்போது, கலெக்டர் உமா பேசியதாவது: கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியை போற்-றிடும் வகையில், ஆண்டுதோறும், ஆடி, 17, 18 ஆகிய இரண்டு நாட்கள், தமிழக அரசு சார்பில், வல்வில் ஓரி விழா கொல்லிம-லையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல், இந்தாண்டும், வரும் ஆக., 2, 3 என, இரண்டு நாட்கள் அரசு சார்பில் கொண்டாடப்படவுள்ளது.இந்த விழாவில், அரசின் அனைத்துத்துறை சார்பில், கண்காட்சி அரங்குகள் அமைக்க வேண்டும். வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலர் கண்காட்சியை, பசுமை திருவிழாவாக நடத்த, துறை அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முழு ஈடு-பாட்டுடன் மேற்கொண்டு விழாவை நடத்த வேண்டும்.மாவட்ட போலீசார், வல்வில் ஓரி அரங்கிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு, போதைப்பொருள் ஒழிப்பு குறித்து துண்டு பிர-சுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கலை பண்-பாட்டு துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வில்வித்தை சங்கம் சார்பில், வில்வித்தை விளையாட்டு போட்டி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட வன அலுவலர் கலாநிதி, டி.ஆர்.ஓ., சுமன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, ஆர்.டி.ஓ., பார்த்தீபன், அரசுத்-துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.