/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'நியூ டூ பிசினஸ்' திட்டத்தில் கடன் பெற தொழில் முனைவோருக்கு அழைப்பு'நியூ டூ பிசினஸ்' திட்டத்தில் கடன் பெற தொழில் முனைவோருக்கு அழைப்பு
'நியூ டூ பிசினஸ்' திட்டத்தில் கடன் பெற தொழில் முனைவோருக்கு அழைப்பு
'நியூ டூ பிசினஸ்' திட்டத்தில் கடன் பெற தொழில் முனைவோருக்கு அழைப்பு
'நியூ டூ பிசினஸ்' திட்டத்தில் கடன் பெற தொழில் முனைவோருக்கு அழைப்பு
ADDED : ஜூலை 25, 2024 01:22 AM
நாமக்கல்: மாவட்டத்தில், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில், 'நியூ டூ பிசினஸ்' என்ற புதிய திட்டத்தின் கீழ், கடன் பெற விண்ணப்-பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக ஊரக புத்தாக்க திட்டம், பல மேம்பாடுகள் செய்யப்பட்டு, 'வாழ்ந்து காட்-டுவோம் திட்டம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு அமல்படுத்-தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 31 மாவட்டங்களில், 120 வட்டாரங்-களில், 3,394 பஞ்.,களில் செயல்படுகிறது. நாமக்கல் மாவட்-டத்தில், மோகனுார், புதுச்சத்திரம், பள்ளிப்பாளையம், திருச்செங்-கோடு ஆகிய வட்டாரங்களில் உள்ள, 87 கிராம பஞ்.,களில் செயல்பட்டு வருகிறது.மாவட்டத்தில், இதுவரை புதிய, பழைய தொழில் முனைவோர், 184 பேர் கண்டறிந்து, தகுதி அடிப்படையில் தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், தற்போது சிறிய மாற்றம் செய்து, 'நியூ டூ பிசினஸ்' என்ற புதிய கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், 87 பஞ்.,களில், புதிய, பழைய தொழில் செய்யும் தொழில் முனைவோர், இதுவரை வங்கியிலோ அல்லது பிற நிதி நிறுவனங்களிலோ தொழில்கடன் பெறாமல் இருந்தால், அவர்-களை கண்டறிந்து தொழில்கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 21 முதல், 55 வயதிற்குள் உள்ள சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், ரேஷன் கார்டில் உள்ள யாராவது ஒருவர் சுய உதவிக்குழுவில் இருந்து தொழில் முனைவோராக விரும்பினால், 'சிபில்' மதிப்-பீடு, பயனாளி பங்கு தொகை போன்ற விதிகளுக்குட்பட்டு கடனு-தவி செய்யப்படும்.கடன் பெற விரும்புவோர், திட்ட அலுவலர்கள், மோகனுார், 83448 96170, புதுச்சத்திரம், 9443201642, பள்ளிப்பாளையம், -9159738233, திருச்செங்கோடு-, 89408 01966 ஆகிய மொபைல் எண்-களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.