/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ப.வேலூரில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்புப.வேலூரில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு
ப.வேலூரில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு
ப.வேலூரில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு
ப.வேலூரில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு
ADDED : ஜன 29, 2024 11:28 AM
ப.வேலுார்: ப.வேலுார் சுற்று வட்டார பகுதி மக்களிடையே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ப.வேலுார் மற்றும் நல்லுார், கூடச்சேரி, ஒழுகூர்பட்டி வீரணம்பாளையம், குப்புச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக, ப.வேலுார், குப்புச்சிபாளையம் பகுதிகளில், அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் பாதிப்புக்குள்ளானவர்கள், ஈரோடு, நாமக்கல், கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த மழையால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்பட்டது. அதன் மூலம் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி, பல்வேறு நோய்களால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன், சுகாதாரத்துறையினர் டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, கொசு மருந்து அடிக்க ப.வேலுார் டவுன் பஞ்.,க்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ப.வேலுார் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் நோய் கண்டு பிடிப்பதற்கான சாதனங்கள் இல்லை. இதனால், ஈரோடு, நாமக்கல், கோவைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், ப.வேலுார் டவுன் பஞ்., 18 வார்டுகளிலும் கொசு மருந்து அடிப்பதை தீவிரப்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.