/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆஞ்சநேயர் கோவில், உழவர் சந்தையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை துவக்கம்ஆஞ்சநேயர் கோவில், உழவர் சந்தையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை துவக்கம்
ஆஞ்சநேயர் கோவில், உழவர் சந்தையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை துவக்கம்
ஆஞ்சநேயர் கோவில், உழவர் சந்தையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை துவக்கம்
ஆஞ்சநேயர் கோவில், உழவர் சந்தையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை துவக்கம்
ADDED : ஜன 11, 2024 12:04 PM
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திர செயல்பாடு துவக்க விழா நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிலங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், துவக்கி வைத்தார்.
ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி, முதல்வர் ஸ்டாலினின், 'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில், 200 பைகள் கொள்ளளவு கொண்ட மஞ்சப்பை வெண்டிங் இயந்திரம் ஒன்றும், நாமக்கல் உழவர் சந்தையில், 300 பைகள் கொள்ளளவு கொண்ட மஞ்சப்பை வெண்டிங் இயந்திரம் ஒன்றும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில், ஒரு பத்து ரூபாய் நாணயம், இரண்டு 5 ரூபாய் நாணயங்கள் செலுத்தியும் மற்றும் க்யூஆர் கோடு முறையை பயன்படுத்தியும் மஞ்சப்பைகளை பெற்றுக்கொள்ளலாம்.
நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, ஆர்.டி.ஓ., சரவணன், மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் சுமித்ராபாய் மணிவண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.