/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வேளாண் வளர்ச்சி விழிப்புணர்வு பிரசார இயக்கம் துவக்கம்வேளாண் வளர்ச்சி விழிப்புணர்வு பிரசார இயக்கம் துவக்கம்
வேளாண் வளர்ச்சி விழிப்புணர்வு பிரசார இயக்கம் துவக்கம்
வேளாண் வளர்ச்சி விழிப்புணர்வு பிரசார இயக்கம் துவக்கம்
வேளாண் வளர்ச்சி விழிப்புணர்வு பிரசார இயக்கம் துவக்கம்
ADDED : ஜூன் 07, 2025 01:57 AM
நாமக்கல், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேலமுருகன் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த இதர துறைகளில், வேளாண் பணிகளை சரியாக மேற்கொள்ள முன் பருவ காரிப் பயிர்களுக்கான வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களான, மோகனுார் வட்டாரத்திலுள்ள கணபதிபாளையம், அரசநத்தம், ஒருவந்துார், பாலப்பட்டி, பெரமாண்டபாளையம், மாடகாசம்பட்டி; எருமப்பட்டி வட்டாரத்திலுள்ள கிராமங்களான வரகூர், காவக்காரன்பட்டி, வரதராஜபுரம், தேவராஜபுரம் காளிசெட்டிப்பட்டி, திப்ரமகாதேவி.
நாமகிரிப்பேட்டை வட்டாரத்திலுள்ள நாரைக்கிணறு, பிலிப்பாகுட்டை, ஒண்டிக்கடை, காட்டூர், ஊனந்தாங்கல், முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில், பி.டி.ஓ., அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்களுடன் இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்த உள்ளனர்.
வேளாண் அறிவியல் நிலையத்துடன், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் இயங்கி வரும், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மற்றும் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகளும் பங்கேற்று பணியாற்றுகின்றனர்.
இதுவரை, 2,070 விவசாயிகளும், 3,551 விவசாய பெண்மணிகளும் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். வரும் காலங்களில், மூன்று வட்டாரங்களில், 24 கிராமங்களில், தொடர்ந்து தொழில் நுட்ப பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்தந்த கிராமங்களில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம். விபரங்களுக்கு, 04286-266345, 266650 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.