வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கல்
வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கல்
வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கல்
ADDED : ஜூன் 07, 2025 01:57 AM
குமாரபாளையம், குமாரபாளையம் பகுதியில், 'எண்ணங்களின் சங்கமம்' என்ற பொதுநல அமைப்பின் சார்பில், குமாரபாளையத்தில் சாலையோரம் கடை வைத்து நடத்தி வரும், 10 சிறு வியாபாரிகளுக்கு நிழற்குடைகளை, இன்ஸ்பெக்டர் தவமணி வழங்கினார். அமைப்பின் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். விடியல் பிரகாஷ் உள்பட பலர்
உடனிருந்தனர்.சாலையோரம் பழங்கள் விற்பவர்கள், டூவீலர் பஞ்சர் ஒட்டுபவர்கள், காலணி தைப்பவர்கள், பூட்டு ரிப்பேர் செய்பவர்கள், பூக்கள் கட்டி வியாபாரம் செய்பவர்கள் உள்பட பலருக்கு நிழற்குடைகள் வழங்கப்பட்டன.