/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஒருவழி சாலையில் செல்லும் பஸ்களால் விபத்து அபாயம் ஒருவழி சாலையில் செல்லும் பஸ்களால் விபத்து அபாயம்
ஒருவழி சாலையில் செல்லும் பஸ்களால் விபத்து அபாயம்
ஒருவழி சாலையில் செல்லும் பஸ்களால் விபத்து அபாயம்
ஒருவழி சாலையில் செல்லும் பஸ்களால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 07, 2025 01:59 AM
நாமக்கல், நாமக்கல், முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்டில், டவுன் பஸ்கள், மினி பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. அங்கு, 'மப்சல்' பஸ்களுக்கு அனுமதி கிடையாது. மேலும், திருச்சி, துறையூர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் நகருக்குள் வந்து பயணியர் மாளிகை அருகே பயணிகளை இறக்கிவிட்டு, பரமத்தி சாலை, கோட்டை சாலை வழியாக புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் வகையில் ஒருவழி சாலையாக செல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சி, துறையூர் பகுதியில் இருந்து வரும், 'மப்சல்' பஸ்கள், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒருவழிச்சாலையில் எதிர் திசையில் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக மெயின்ரோடு சென்று, சேலம் பிரிவு சாலை வழியாக புது பஸ் ஸ்டாண்ட் செல்கிறது. இவ்வாறு விதிமீறி இயக்கப்படும் பஸ்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விதிமீறி இயக்கும் வாகனங்களை, 'சிசிடிவி' கேமராக்கள் மூலம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.