/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் சேர்க்கை: பெற்றோருக்கு அழைப்பு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் சேர்க்கை: பெற்றோருக்கு அழைப்பு
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் சேர்க்கை: பெற்றோருக்கு அழைப்பு
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் சேர்க்கை: பெற்றோருக்கு அழைப்பு
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் சேர்க்கை: பெற்றோருக்கு அழைப்பு
ADDED : மே 29, 2025 01:37 AM
நாமக்கல் 'மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில், 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், களங்காணி, அ.பாலப்பட்டி, நவணி, பாப்பிநாயக்கன்பட்டி, அகரம் என, ஐந்து தொடக்கப்பள்ளிகள், அ.பாலப்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, களங்காணியில், மேல்நிலைப்பள்ளி என, மொத்தம், ஏழு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 2024-25ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், அ.பாலப்பட்டி, அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீதம் முன்னுரிமை, 6 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, உயர் கல்வி பயில, 7.5 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
மேலும், விலையில்லா பாட நுால்கள், பாட குறிப்புகள், நான்கு இணை சீருடைகள், புத்தக பை, வண்ண பென்சில்கள், காலணிகள் கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை, திறனறி தேர்வு ஊக்கத்தொகை உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி, ஐந்து வயதிற்கு மேற்பட்ட மாணவர்களை, பெற்றோர் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளி களில் சேர்த்து
பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.