/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வடிகால் அடைப்பை சுத்தம் செய்ய கோரிக்கை வடிகால் அடைப்பை சுத்தம் செய்ய கோரிக்கை
வடிகால் அடைப்பை சுத்தம் செய்ய கோரிக்கை
வடிகால் அடைப்பை சுத்தம் செய்ய கோரிக்கை
வடிகால் அடைப்பை சுத்தம் செய்ய கோரிக்கை
ADDED : மே 29, 2025 01:37 AM
பள்ளிப்பாளையம் பள்ளிப்பாளையத்தில், சாலை, குடியிருப்பு பகுதியில் செல்லும் ஒரு சில தவிர, பெரும்பாலான வடிகாலில் குப்பை, கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேக்கமடைந்து காணப்படுகிறது. மழை பெய்தாலும், மழைநீர் சீராக செல்ல வழியின்றி தேங்கி விடுகிறது.
கடந்த, 26ல் சிறிது நேரம் தான் மழை பெய்தது. இந்த மழைக்கே ஆர்.எஸ்., சாலையில் செல்லும் வடிகாலில் அடைப்பு இருந்த காரணத்தால் சாலையில் மழை நீர் சென்றது. அந்தளவுக்கு வடிகாலில் அடைப்பு ஏற்பட்டிருந்தது.பல இடங்களிலும் இதே நிலை தான். இனிமேல் மழை காலம் என்பதால் வடிகாலில் உள்ள குப்பை, கழிவு, பிளாஸ்டிக் கழிவுகளையும், அடைப்பையும் அகற்றி, வடிகாலை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.