Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை அவசியம்

காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை அவசியம்

காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை அவசியம்

காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை அவசியம்

ADDED : பிப் 25, 2024 03:29 AM


Google News
பள்ளிப்பாளையம்: காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், பள்ளிப்பாளையம் ஆற்றுப்பகுதியில், மணல் திருட்டை தடுக்க வருவாய்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிப்பாளையம் ஆற்றுப்பகுதியான சந்தைபேட்டை, நாட்டகவுண்டம்புதுார், அக்ரஹாரம், ஆவத்திபாளையம், வசந்தநகர் மற்றும் பல இடங்களில், ஆற்றின் மையப்பகுதியில் மணல் திட்டு பரப்பு உள்ளது. கடந்த ஏழு மாதங்களாக தண்ணீர் வரத்து அதிகரித்து வந்ததால், தண்ணீரில் அடித்து வரப்பட்ட மணல் இங்கு பரவலாக படர்ந்து இருக்கும்.

தற்போது தண்ணீர் வரத்து குறைந்து, ஆறு வறண்டு போய் உள்ளதால், மணல் பரப்பில் அதிகளவு மணல் குவிந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு, இரவு நேரத்தில் சிலர் மணலை அள்ளி, பரிசல் மூலம் கரைக்கு கொண்டு வந்து, மூட்டைகளாக கட்டி விற்பனை செய்தனர். வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, பதுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், ஆற்றில் மணல் பரப்பு அதிகரித்து இருப்பதால், மணல் திருட்டு நடக்க அதிகளவு வாய்ப்புள்ளதால், இதனை தடுக்க ஆரம்பத்திலேயே வருவாய்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் ஆற்றில் மண்வளம் காணாமல் போய் விடும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us