/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மது அருந்தும் பாராக மாறிய பயணிகள் நிழற்கூடம்மது அருந்தும் பாராக மாறிய பயணிகள் நிழற்கூடம்
மது அருந்தும் பாராக மாறிய பயணிகள் நிழற்கூடம்
மது அருந்தும் பாராக மாறிய பயணிகள் நிழற்கூடம்
மது அருந்தும் பாராக மாறிய பயணிகள் நிழற்கூடம்
ADDED : பிப் 12, 2024 11:27 AM
பள்ளிப்பாளையம்: ஆவத்திபாளையம், பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடம் பாராக மாறியுள்ளது.
பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் பயணிகள் வசதிக்காக இருக்கை வசதியுடன் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் வரும் வரை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நிழற்கூடத்தில் காத்திருப்பர். பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழற்கூடம் தற்போது குடிமகன்களின் கூடாரமாக மாறிவிட்டது.
நிழற்கூடத்திலேயே குடிமகன்கள் மது அருந்துகின்றனர். மேலும் பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். நிழற்கூடத்தின் உள்ளே எங்கு பார்த்தாலும் மது பாட்டில், பிளாஸ்டிக் கப்புகள் சிதறி கிடக்கிறது. இதனால் பயணிகள் நிழற்கூடத்தின் உள்ளே செல்வதில்லை, சாலையிலேயே பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழற்கூடம், தற்போது மது அருந்தும் பாராக மாறி விட்டது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பஞ்., தலைவர் ரவி குழந்தைவேல் கூறுகையில்,'' பகல், இரவு என எல்லா நேரத்திலும் குடிமகன்கள், இந்த நிழற்கூடத்திற்கு வந்து மது அருந்துகின்றனர்.
இரவு நேரத்தில் குடிமகன்களின் கூட்டம் அதிகரித்து விடுகிறது. பஞ்., நிர்வாகம் சார்பில் நிழற்கூடத்தை சுத்தம் செய்து, குடிமகன்கள் வரக்கூடாது என தெரிவித்தோம். ஆனால் மீண்டும் வருகின்றனர். இது குறித்து போலீசார் கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.