Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மூங்கில் ஏற்றிச்செல்ல ரூ.4,000 லஞ்சம்: வனத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

மூங்கில் ஏற்றிச்செல்ல ரூ.4,000 லஞ்சம்: வனத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

மூங்கில் ஏற்றிச்செல்ல ரூ.4,000 லஞ்சம்: வனத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

மூங்கில் ஏற்றிச்செல்ல ரூ.4,000 லஞ்சம்: வனத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

ADDED : ஜன 31, 2024 03:35 PM


Google News
நாமக்கல் : லாரியில் மூங்கில்களை ஏற்றிச்செல்ல, 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வனத்துறை அதிகாரிக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அடுத்த ஈச்சவாரியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ராஜா, 65; விவசாயி.

இவர், தன் தோட்டத்தில், மூங்கில் மரங்களை வளர்த்து வந்தார். அந்த மரங்களை வெட்டி லாரிகளில் ஏற்றிச்செல்ல அனுமதி வேண்டி, சேந்தமங்கலம் வனத்துறை வனவர் வரதராஜன், 58, நடுக்கோம்பை வனக்காவலர் காசிமணி, 48, ஆகியோரிடம் மனு அளித்தார்.ஆனால், அனுமதியளிக்க, 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். அவர்களின் ஆலோசனைப்படி, 2005 மார்ச், 5ல், வனவர் வரதராஜன், வனக்காவலர் காசிமணியை சந்தித்த ராஜா, ரசாயனம் தடவிய, 4,000 ரூபாய் நோட்டுகளை வழங்கியுள்ளார்.அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை நடத்திய நீதிபதி சாந்தி, 19 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், நேற்று தீர்ப்பளித்தார். அதில், லஞ்சம் வாங்கிய வனவர் வரதராஜன் குற்றவாளி என தீர்ப்பளித்து, இரண்டு பிரிவுகளில், தலா, 3 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். வனக்காவலர் காசிமணி மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை வழக்கிலிருந்து விடுவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us