ADDED : மே 22, 2025 01:45 AM
குமாரபாளையம், குமாரபாளையத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள, வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., நடராஜன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சரஸ்வதி தியேட்டர் ரோடு, பெராந்தர்காடு ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமலிங்கம், 27, பரமசிவன், 58, ஆகியோரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.