/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சாலை மறியலால் 'டிராபிக் ஜாம்' குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சாலை மறியலால் 'டிராபிக் ஜாம்'
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சாலை மறியலால் 'டிராபிக் ஜாம்'
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சாலை மறியலால் 'டிராபிக் ஜாம்'
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சாலை மறியலால் 'டிராபிக் ஜாம்'
ADDED : ஜூலை 19, 2024 02:20 AM
மோகனுார்: மோகனுார் தாலுகா, மணப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட, 6வது வார்டு சென்னாக்கல்புதுாரில், ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இப்ப-குதியில், காவிரி குடிநீர் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வினி-யோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டு நாட்க-ளாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, பஞ்., நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று காலை, 10:30 மணிக்கு, வண்டிகேட்டி பகுதியில் திடீர் மறி-யலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மோகனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா, எஸ்.ஐ., நந்தகுமார் மற்றும் உள்ளாட்சி துறையினர் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மோட்டார் பழுதடைந்துள்ளது. அவற்றை சரி செய்து, தடை-யின்றி குடிநீர் வழங்குதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, மறி-யலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக, மோகனுார் - ப.வேலுார் சாலையில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
* இதேபோல், எஸ்.வாழவந்தி பஞ்., அண்ணா நகர் பகுதியில், கடந்த சில நாட்களாக தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டது. மேலும், அருகே உள்ள ஆழ்துளை குழாய் கிணற்றில் பொருத்தப்-பட்ட கை பம்பும் நீண்ட நாட்களாக சேதமடைந்து கிடக்கிறது. அவற்றை சரி செய்வதுடன், முறையாக தண்ணீர் சப்ளை செய்ய வலியுறுத்தி, நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த உள்ளாட்சி பணியாளர்கள், ஆழ்துளை குழாய் கிணற்றில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், அதிக பைப்புகளை இறக்கி தடையின்றி தண்ணீர் வினியோகம் செய்-யவும், கை பம்புகைளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்-படும் என உறுதி அளித்தனர். தொடர்ந்து, மறியலை கைவிட்-டனர்.
திடீர் மறியல் காரணமாக, பாலப்பட்டி - வள்ளிபுரம் சாலையில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.