Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ முனியப்பன் கோவில் ஆடித்திருவிழா எருதாட்டம் காளைகளுடன் இளைஞர்கள் கொண்டாட்டம்

முனியப்பன் கோவில் ஆடித்திருவிழா எருதாட்டம் காளைகளுடன் இளைஞர்கள் கொண்டாட்டம்

முனியப்பன் கோவில் ஆடித்திருவிழா எருதாட்டம் காளைகளுடன் இளைஞர்கள் கொண்டாட்டம்

முனியப்பன் கோவில் ஆடித்திருவிழா எருதாட்டம் காளைகளுடன் இளைஞர்கள் கொண்டாட்டம்

ADDED : ஜூலை 19, 2024 02:02 AM


Google News
வீரபாண்டி: நெய்காரப்பட்டி, மூங்கில்குத்து முனியப்பன் கோவில் ஆடித்திரு-விழாவையொட்டி, நேற்று நடந்த பாரம்பரிய எருதாட்டத்தில், 96 காளைகளுடன் இளைஞர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சேலம், நெய்காரப்பட்டி மூங்கில்குத்து முனியப்பன் கோவிலில், ஆடி மாதம் முதல் வியாழக்கிழமை பொங்கல் விழாவை-யொட்டி, எருதாட்டம் நடத்தப்படுகிறது. நேற்று காலை முனியப்-பனுக்கு பூஜை நடத்தப்பட்டது. கொண்டலாம்பட்டி, நெய்காரப்-பட்டி, உத்தமசோழபுரம், அரியானுார், வீரபாண்டி, சீரகாபாடி மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குடும்-பத்துடன் கோவிலுக்கு வந்து ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

எருதாட்டத்தையொட்டி, 19 கோர்வை சார்பில் பல்வேறு ஊர்-களில் இருந்து அழைத்து வரப்பட்ட, 96 காளைகளையும் குளிப்-பாட்டி, மஞ்சள் சந்தனம் பூசி அலங்கரித்து, நெய்காரப்பட்டி மாரி-யம்மன் கோவில் மைதானத்துக்கு மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டது. காளைகளை பிடிக்கவும், வேடிக்கை பார்க்கவும் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர், கூச்சலிட்டு உற்சாகமாக காளைகளை வரவேற்றனர். மக்களை பார்த்து சீறிப்பாய்ந்த காளைகளை, கோர்வை குழுக்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்-பட்ட இளைஞர்கள், காளைகளின் இருபுறமும் கட்டப்பட்டிருந்த நீண்ட கயிறுகளை பிடித்து இழுத்து கட்டுப்படுத்தினர்.

ஒரே நேரத்தில், நான்கு கோர்வைகளின் காளைகள் மைதானத்தில் விளையாடிய போது, கோர்வை குழுக்கள் இடையே

வாக்குவாதம் ஏற்பட்டு மோதும் சூழல் உருவானதுடன், இளை-ஞர்களின் கைகளை விட்டு கயிற்றுடன் தாறுமாறாக ஓடிய காளை-களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காளைகள் விரட்டியதில் தடுமாறி விழுந்து லேசான காயம-டைந்த, 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆடித்திரு-விழா மற்றும் எருதாட்டத்துக்கான ஏற்பாடுகளை நெய்காரப்பட்டி மூங்கில் குத்து முனியப்பன், மாரியம்மன், விநாயகர் கோவில் நிர்-வாகிகள், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். கொண்ட-லாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன், மாநகர ஆயுதப்படையை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us