/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ப.வேலுாரில் தேங்காய் பருப்பு ரூ.8.70 லட்சத்துக்கு வர்த்தகம் ப.வேலுாரில் தேங்காய் பருப்பு ரூ.8.70 லட்சத்துக்கு வர்த்தகம்
ப.வேலுாரில் தேங்காய் பருப்பு ரூ.8.70 லட்சத்துக்கு வர்த்தகம்
ப.வேலுாரில் தேங்காய் பருப்பு ரூ.8.70 லட்சத்துக்கு வர்த்தகம்
ப.வேலுாரில் தேங்காய் பருப்பு ரூ.8.70 லட்சத்துக்கு வர்த்தகம்
ADDED : ஜூலை 19, 2024 02:00 AM
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்-தையில், வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. இங்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்-டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்-றனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர்.
கடத்த வாரம் நடந்த ஏலத்தில், 10,580 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சம் கிலோ, 94.59 ரூபாய், குறைந்தபட்சம், 90.99 ரூபாய், சராசரி, 92.97 ரூபாய் என, மொத்தம், 9.30 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
இதேபோல், நேற்று நடந்த ஏலத்திற்கு, 9,568 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதி-கபட்சம் கிலோ, 94.28 ரூபாய், குறைந்தபட்சம், 90.49 ரூபாய், சராசரி, 92.69 ரூபாய் என, மொத்தம், 8.70 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
விளையாட்டு மைதானம்
அமைக்க கோரி ம.நீ.ம., மனு
குமாரபாளையம், ஜூலை 19-
குமாரபாளையத்தில், விளையாட்டு மைதானம் அமைக்கக்கோரி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு, மக்கள் நீதி மய்ய மாவட்ட மகளிரணி சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
குமாரபாளையம் பகுதியில் உள்ள இளைஞர்கள், வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு சென்று பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்று வருகின்றனர். இவர்கள் பயிற்சி பெற, சேலம் அல்லது ஈரோடு மாவட்டத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இவர்களுக்கு குமாரபாளையம் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்தால், அவர்கள் பயிற்சி பெறவும், பல்வேறு போட்டிகளில் வென்று, நம் நாட்-டிற்கு பெருமை சேர்க்கவும் உதவியாக இருக்கும். எனவே, குமார-பாளையம் பகுதியில் விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி-யாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.