ADDED : ஜூன் 08, 2024 02:57 AM
சேந்தமங்கலம், ஜூன் 8-
கொல்லிமலையில், பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவ மாணவியருக்கான கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம், ஜி.டி.ஆர்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நாராயணமூர்த்தி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் செந்தில்குமார், பெரியசாமி உள்ளிட்டோர் மாணவ, மாணவியருக்கு கோடை விழா பயிற்சி அளித்தனர்.