/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ எஸ்.வி.பி., 'நீட்' பயிற்சி மைய மாணவி தமிழ் வழியில் முதலிடம் பெற்று சாதனை எஸ்.வி.பி., 'நீட்' பயிற்சி மைய மாணவி தமிழ் வழியில் முதலிடம் பெற்று சாதனை
எஸ்.வி.பி., 'நீட்' பயிற்சி மைய மாணவி தமிழ் வழியில் முதலிடம் பெற்று சாதனை
எஸ்.வி.பி., 'நீட்' பயிற்சி மைய மாணவி தமிழ் வழியில் முதலிடம் பெற்று சாதனை
எஸ்.வி.பி., 'நீட்' பயிற்சி மைய மாணவி தமிழ் வழியில் முதலிடம் பெற்று சாதனை
ADDED : ஜூன் 08, 2024 02:58 AM
எலச்சிபாளையம்: திருச்செங்கோடு, சக்கராம்பாளையத்தில் எஸ்.வி.பி., 'நீட்' பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தமிழ், ஆங்கில வழியில் ஓராண்டு, 'நீட்' பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓராண்டு, 'நீட்' பயிற்சி பெற்றனர். நடந்து முடிந்த, 'நீட்' தேர்வில், நாமக்கல் எஸ்.வி.பி., நீட் பயிற்சி மையத்தில், தமிழ்வழியில் பயின்ற மாணவி ரூபிகா, 720க்கு, 674 மதிப்பெண் பெற்று, தமிழகத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஆங்கில வழியில் பயின்று தேர்வெழுதிய மாணவி ராகவி, 720க்கு, 670 மதிப்பெண் எடுத்து, 'நீட்' பயிற்சி மையத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவ, மாணவியர் தனுஷ், 660, பரணிதரன் 638, ஜோஸ்வாநிமல், 618, கிருத்திகா, 613, ராஜசேகர், 612, கிருஷ்ணகாருண்யா 608, மைதிலி, 606, மதிப்பெண் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். 600 மதிப்பெண்களுக்கு மேல், 9 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல், 36 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 43 பேரும் பெற்றுள்ளனர்.
'நீட்' பயிற்சி மையத்திற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவியரை, 'நீட்' பயிற்சி மைய தலைவர், தாளாளர், இயக்குனர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். தொடர்புக்கு: 99655-31727, 99655-35967, 94422-88402, 9442894471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.