ADDED : ஜூன் 08, 2024 02:32 AM
அரசு பள்ளியில் மரம் நடும் விழா
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தினமும் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த அரசு பள்ளி வளாகத்தில் மரங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் நடைபயிற்சிக்கு செல்வோர், பள்ளி வளாகம் முழுதும், 'மரம் நடுவோம், மழை பெறுவோம்' என்ற குறிக்கோளுடன், மரக்கன்றுகளை நட முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா துவக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய முதியவர் பலிநாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த வடுகம் குட்டைக்காட்டை சேர்ந்தவர் வீரமுத்து, 75. இவர், கடந்த, 1 மாலை வீட்டிற்கு சாலையோரம் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த டூவீலர், வீரமுத்து மீது மோதியது. இதில், கீழே விழுந்த வீரமுத்து படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த, 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வீரமுத்து சிகிச்சை பலனின்றி, நேற்று உயிரிழந்தார். நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
ரேஷனில் மே மாத பாமாயில்
துவரம் பருப்பு பெற வாய்ப்பு
நாமக்கல், ஜூன் 8-
'கடந்த மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுக்கொள்ள முடியாத கார்டுதாரர்கள், இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், கடந்த மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொது வினியோக திட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள இயலாத கார்டுதாரர்கள், அவர்களுக்கான ஒதுக்கீட்டை இம்மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.