/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வேட்டாம்பாடியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு வேட்டாம்பாடியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
வேட்டாம்பாடியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
வேட்டாம்பாடியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
வேட்டாம்பாடியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
ADDED : ஜூலை 18, 2024 01:16 AM
நாமக்கல்,: நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடி அருகே, சாக்கடை கழிவுநீர் தேக்கத்தால் அப்பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் அடுத்த, சேந்தமங்கலம் சாலையில் வேட்டாம்பாடி ஊராட்சி உள்ளது. அதன் அருகே செல்லப்பாகாலனி, கூச்சுக்கல்-புதுார், மின் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. அங்கு, 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நி-லையில் கூச்சுக்கல்புதுாரில் இருந்து வீசாணம் செல்லும் சாலையில் மின் நகர் அமைந்துள்ளது.
அங்கே நாமக்கல் நகர் பகுதியில் இருந்து செல்லும் சாக்கடை கழிவுநீர் பெருமளவு தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுதும் தர்நாற்றம் வீசுவதோடு மக்கள் சுகாதார சீர்கேட்டால் பாதிப்படைந்துள்ளனர். எனவே, மக்கள் நலன்கருதி மின் நகர் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை முழுதும் வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.