ADDED : ஜூலை 18, 2024 01:16 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., அம்பேத்கர் நகரில் அரசு தொடக்கப்-பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாண-வர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் உள்ள மரத்தில் தேன்கூடு உள்ளதாகவும், இதில் உள்ள தேனீக்கள், காற்று வீசும் போது பறந்து வந்து மாணவர்களை கடிப்பதாகவும், கடந்த, 14ல் நமது நாளிதழில் செய்தி வெளியி-டப்பட்டது. இதையடுத்து, மாணவர்களுக்கு தொந்தரவாக இருந்த தேன் கூட்டை தீயணைப்பு துறையினர் அகற்றினர். இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் நிம்மதியடைந்தனர்.
டயர் கழன்று ஓடிய அரசு பஸ்
குமாரபாளையம்,
சேலத்திலிருந்து, ஈரோடு நோக்கி அரசு பஸ் ஒன்று, நேற்றிரவு, 7:00 மணியளவில் சென்று கொண்டிருந்தது. டிரைவராக ராஜா, கண்டக்டராக மாயகிருஷ்ணன் இருந்தனர். சங்ககிரி அருகே சென்ற போது பஸ்சில் பழுது ஏற்பட்டது. சங்ககிரி டிப்போவில் மாற்று பஸ் ஏற்பாடு செய்து, பயணிகள் அனைவரையும் அந்த பஸ்சில் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பழுதான பஸ்சை, பவானி டிப்போவிற்கு கொண்டு செல்ல, குமாரபாளையம் புறவ-ழிச்சாலையில் ஓட்டிச்சென்றார். அப்போது பஸ் முன்பக்க டயர் கழன்று, அருகே இருந்த மூடப்பட்டிருந்த கடை ஒன்றின் முன் போய் விழுந்தது. டிரைவர் ராஜா, சாமர்த்தியமாக பஸ்சை ஓரங்-கட்டி நிறுத்தினார். பயணிகள் யாரும் இல்லாததால், அசம்பா-விதம் தவிர்க்கப்பட்டது.