/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
ADDED : ஜூலை 14, 2024 03:27 AM
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கலைய-ரங்கில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு நடந்தது. எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தார். அதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட போலீஸ் அதிகாரிகள், ஆளினர்கள், ஆயுதப்படை போலீஸ் ஆளினர்கள் உட்பட, 500 போலீசார், 100 ஊர்க்காவல் படையினர் என, மொத்தம், 600 பேர் பங்கேற்றனர். இப்பயிற்சி வகுப்பில், சாலை பாதுகாப்பு தொடர்பான அனைத்து விதிமுறை, சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு புகைப்படங்களுடன் விளக்கப்பட்டது.
மண் கடத்திய டிரைவர் கைது
மோகனுார்: மோகனுார் பகுதியில் கனிமவளத்துறை ஆய்வாளர் கிருஷ்ண-மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள், திடீர் ஆய்வு மேற்கொண்-டனர். அப்போது, கிராவல் மண் கொண்டு சென்ற டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். கிராவல் மண் எடுத்து செல்வதற்கு எவ்வித அனுமதியும் பெறாமல் கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி சென்ற லாரியை பறிமுதல் செய்து, மோகனுார் போலீசா-ரிடம் ஒப்படைத்தனர். மோகனுார் போலீஸ் எஸ்.ஐ., இளையசூ-ரியன், லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் சரவணன், 46, என்ப-வரை கைது செய்து விசாரிக்கின்றார்.